ஒரே ஒரு வரியில் ராஜினாமா கடிதம் எழுதி.. மொத்த நிறுவனத்தையே ஆடவைத்த ஊழியர்.. அது என்ன வார்த்தை தெரியுமா..?

By Nanthini on ஆடி 20, 2025

Spread the love

மும்பையை தளமாக கொண்ட பிராண்டான ஹிங்லிஷில் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுபம் குனே. இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் வெளிப்படையாக ராஜினாமா மின்னஞ்சலை பகிர்ந்துள்ளார். தற்போது இதுதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேர்மறையான ராஜினாமா என்ற தலைப்பிடப்பட்ட இந்த பதிவில் சமூக ஊடக பயனர்களை சிரிக்க வைத்த மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் வெளியாகி உள்ளது. அந்தப் பதிவில் ஊழியர்,  ”ஹாய் சார், மெயின் பிக் கயா. சாம்னே வாலி கம்பெனி சார் பைஸே ஜெயதா தே ரஹி ஹை (நான் விற்று விட்டேன். மற்ற நிறுவனம் இன்னும் கொஞ்சம் பணம் தருகிறது) அன்புடன், தயித்வா ஷா,” என்று எழுதியுள்ளார்.

ஒரே ஒரு வரியில் ராஜினாமா கடிதம் எழுதிய ஊழியர்.., வைரலாகும் அவரது வார்த்தை | Employee Wrote A Resignation Letter In One Line

   

இந்த ராஜினாமா கடிதத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ராஜினாமா சூழ்நிலைக்கு ஒரு யோசனை கொடுக்காதீர்கள் என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவாக ராஜினாமா செய்வதற்கு பல காரணங்களை நாம் குறிப்பிட்டு இருப்போம். ஆனால் ஒரே வரியில் இவர் இவ்வாறு ராஜினாமா செய்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.