“இது சாதாரண விஷயமா…? நான் என்ன தவறு செய்கிறேன்…?” அதிர்ச்சியில் உறைந்த பெண்…. சோஷியல் மீடியாவில் வெடித்த காரசார விவாதம்…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

பெங்களூரு HSR லேஅவுட் பகுதியில் வசிக்கும் திரிஷா சித்வானி என்ற பெண், தனது ஆகஸ்ட் மாதச் செலவுக் கணக்குகளைச் சரிபார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது ஒரு மாதச் செலவு மட்டும் ரூ. 1.8 லட்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்துப் வீடியோ பதிவிட்ட அவர், “பெங்களூருவில் வாழ இவ்வளவு செலவாவது சாதாரண விஷயமா? நான் ஏதேனும் தவறு செய்கிறேனா? நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” என இணையவாசிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெங்களூருவின் வாழ்வாதாரச் செலவு குறித்த காரசார விவாதத்தைத் தூண்டியுள்ளது.

   

இதற்குப் பதிலளித்த சிலர், HSR போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் சாதாரணமான தொகைதான் என்றும், தங்களுக்கு மாதம் 3 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது என்றும் ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில், மற்றொரு தரப்பினர் “நாங்கள் மாதம் 15,000 ரூபாயிலேயே வாழ்கிறோம், இது உங்களின் ஆடம்பரச் செலவு” என்றும், “சொந்தக் கணக்குகளுக்கு மாற்றிய தொகையையும் இதில் சேர்த்திருப்பீர்கள்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.