தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டதை சேர்ந்த சுவாதிக்கு(28) கணவர், இரு மகன்கள் உள்ளனர். சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்தார். இளைய மகன் அவருடன் இருந்து அருகில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த சுவாதி, துண்டிகல் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் கிஷனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கிஷனுக்கு மனைவி, குழந்தை உள்ளனர். இந்த நிலையில் சுவாதியும் கிஷனும் நெருக்கமாக பழகியுள்ளனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
கிஷன் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி சுவாதிக்கு உதவினார். இது கிஷன் குடும்பத்தில் சிக்கலை உண்டாக்கியது. எனவே கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் சுவாதியை கொல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் சுவாதியும், இளைய மகனும் வீட்டில் இருந்தபோது தனது நண்பர் வம்சியுடன் உள்ளே நுழைந்தார். பின்னர் மகன் முன்னிலையில் சுவாதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு ராஜேஷ் போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பிய வம்சியைத் தேடுகின்றனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற மகளை உயிரோடு இருக்கும்போதே இறந்ததாகக் கருதி, குடும்பத்தினர் அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. வறுமையான…
ஆந்திர மாநிலம் அல்லது வடமாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மற்றும்…
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் பல மாடி கட்டிடம்…
அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பொன்னபுரம் ரயில்வே கேட் அருகே சிரஞ்சீவி என்ற இளைஞர் ரயிலின் முன்…
அமைச்சராக வேண்டும் என்ற அதிகார ஆசையினால்தான் சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடுமையாக…