தனிமையில் அழைத்த கள்ளக்காதலன்…. நம்பி சென்ற பெண்ணுக்கு முட்புதரில் காத்திருந்த அதிர்ச்சி…. ஈவு இரக்கமின்றி செய்த சம்பவம்….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில் முட்புதருக்குள் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட 31 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அரியூரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கணவர் சரவணனைப் பிரிந்து, அதே ஊரைச் சேர்ந்த மாசானம் என்பவருடன் மானாமதுரையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு மாசானம் தன்னைவிட்டுச் சென்றதால், முத்துலட்சுமி தனது கணவர் சரவணனுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே, முத்துலட்சுமியைத் தொடர்புகொள்ள முயன்ற மாசானம், அவர் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், அவரை நேரில் பேசுவதற்காக வைகையாற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

   

அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முத்துலட்சுமியை முட்புதருக்குள் தள்ளித் தாக்கிய மாசானம், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்ய முயன்றுள்ளார். பலத்த காயமடைந்து மயங்கிவிட்ட பெண்ணை அவர் இறந்துவிட்டதாகத் தவறாக எண்ணி, அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் தப்பியோடியுள்ளார்.

   

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மீட்கப்பட்ட முத்துலட்சுமி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மானாமதுரை தனிப்படை போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு மாசானத்தைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.