“முதலமைச்சருக்கு பாச முத்தம்…” தோளில் சாய்ந்து  மெட்ரோ ரயிலில் விஜய்யைக் கண்டு நெகிழ்ந்த பெண்… இணையத்தில் தீயாய்ப் பரவும் வீடியோ…!!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமைச் செயலகப் பணிகளை முடித்த பிறகு, ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் வரை ரயிலில் நேரில் பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அனைவரும் இன்ப அதிர்ச்சியடைந்து அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, ரயிலில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியில் விஜய்யின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு, அவரது தோளில் சாய்ந்து தனது நெகிழ்ச்சியான அன்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நந்தனம் சென்றடைந்த விஜய், அங்குள்ள மெட்ரோ அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கத்திப்பாராவில் 100 அடி உயரத்தில் நடைபெற்று வரும் பாலப் பணிகளையும் நேரில் பார்வையிட்டார். முதலமைச்சர் வருவதையறிந்து வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்களுக்கு அவர் கை அசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் விஜய் அவர்கள் மக்களிடையே ஒரு திரைப் பிரபலத்தைப் போலவே தொடர்ந்து அன்போடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வருகிறார்.