ஐயோ போச்சா… அதிர்ஷ்டம் கதவை தட்டி… கைநழுவி போனது…! ரூ.153 கோடி ஜெயிச்சும்… நடுத்தெருவில் நின்ற பெண்…! குப்பைத்தொட்டி செய்த வேலை… பரபரப்பு சம்பவம்…!!

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

வழக்கமாக லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின் என்ற பெண், கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் 12 மில்லியன் பவுண்டுகள் மெகா லாட்டரி பரிசை வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்ததும், அவர் உடனடியாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

பரிசு விவரத்தை உறுதிசெய்ய விரும்பி, கீத்தின் தாய் அந்த லாட்டரி சீட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். ஆனால், அதில் வெற்றி பெற்றதற்கான எந்தவொரு அறிவிப்பும் அல்லது எச்சரிக்கை ஒலியும் வரவில்லை. இதனால் அந்தச் சீட்டுக்கு பரிசு எதுவும் விழவில்லை என்று தவறாகக் கருதி, அதை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் தூக்கி வீசி எறிந்துவிட்டார்.

   

பின்னர் கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, வெற்றி பெற்ற சீட்டு தங்களிடம் இருந்த தகவலைத் தெரிவித்தார். எனினும், அசல் லாட்டரி சீட்டு கையில் இல்லாததால் அவரால அந்தப் பரிசை உடனடியாகப் பெற முடியவில்லை. தற்போது இதுகுறித்து லாட்டரி நிறுவனம் 30 நாட்கள் காலக்கெடு விதித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அத்தனை கோடி பரிசை வென்றும், அதை கையில் பெற முடியாமல் கீத் பெரும் தவிப்பில் காத்துக்கொண்டிருக்கிறார்.