“அவனுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு கொன்னுடலாம்”… கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்ற பெண்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு பெண் பஞ்சாபின் பரித்கோட் பகுதியில் தனது கணவரை தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் இறுதியில் பஞ்சாபின் காவல்துறையினருக்கு ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து ஒரு பதட்டமான அழைப்பு வந்துள்ளது. அதில் தனது கணவர் குர்விந்தர் சிங் தங்கள் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது கொல்லப்பட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனால் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியதில் பல சந்தேகங்கள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக அவர் கூறியுள்ளார். தனது கள்ளக்காதல் குறித்து கணவர் அறிந்ததும் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். காவல்துறையை திசை திருப்புவதற்காக ஒரு பொய்யான கதையை தயார் செய்து தங்கள் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்து தனது கணவரை கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

   

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வெளிநாட்டில் இருந்த போது ஒரு ஆன்லைன் தளத்தில் சந்தித்ததையும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் திரும்பிய பிறகு உறவை தொடர்ந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.