ஐயோ பாவம்… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூண்டில் அமைதியாக இருந்த புலியின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

புலி வெளியே வந்ததும் பீதியடைந்த பெண்கள் மரங்களிலும் வலைகளிலும் ஏறி தப்ப முயன்றனர். ஆனால், புல் வெட்டுவதில் ஏற்பட்ட பொறாமை காரணமாகவே இக்கதவு வேண்டுமென்றே திறக்கப்பட்டதாக சக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கதவைத் திறந்த காவலாளியை வனத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன், இது குறித்து விசாரணை நடத்த ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.