ஐயோ… கொடுமையே என்ன இது… சிக்னலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது புகுந்த கார்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… இளம் தாய் பரிதாபப் பலி… மும்பையில் பரபரப்பு…!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 34 வயது பெண் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய 70 வயதான கிருஷ்ணா சாமங்கர் கைது செய்யப்பட்டு, பிரேக்கிற்கு பதிலாக தப்பதலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததாகத் தெரிவித்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதை அடுத்து, அவர் 15,000 ரூபாய் பணப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

   

https://twitter.com/HateDetectors/status/2095416965489971430/video/1

   

இந்த விபத்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளனர். மேலும், காவல்துறை காவலில் ஓட்டுநருக்குச் சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.