“பேரனை எங்ககிட்ட குடுத்துருங்க…” அமெரிக்காவில் கொல்லப்பட்ட பெண்…. பஞ்சாபில் நிலைகுலைந்த பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

அமெரிக்காவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவற்ற கைக்குழந்தையின் பாதுகாப்பை கோரி லூதியானாவில் உள்ள அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் குரல் கொடுத்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில், அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பெண்ணிற்கு இருந்த கைக்குழந்தை தற்போது அமெரிக்க அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. தாய் பலியான நிலையில், அனாதையாக நிற்கும் தன் பேரனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி லூதியானாவில் இருக்கும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது வருகின்றனர்.

   

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், தூதரக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, அமெரிக்காவில் உள்ள அந்தச் சிறு குழந்தையை மீட்டெடுத்து இந்தியாவிற்குத் தங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்திலும் சர்வதேச அளவிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.