பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தோழியின் முகத்தை பலவந்தமாக கேக்கில் அழுத்திய போது, கேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசிகள் பெண்ணின் முகத்தில் சரமாரியாகக் குத்தி முகம் சிதைந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் விழாவில் பெண் ஒருவர் மெழுகுவர்த்தியை ஊதி கேக் வெட்டத் தயாரான போது, அருகில் இருந்த தோழிகள் விளையாட்டாக அவரது தலையைப் பிடித்து கேக்கிற்குள் அழுத்தினர். ஆனால், கேக்கின் உட்பகுதியில் கூர்மையான சிரிஞ்ச் ஊசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பெண்ணின் முகத்தை அழுத்திய அடுத்த நொடியில் அந்த ஊசிகள் முகத்தில் குத்திப் பாய்ந்ததில் கொண்டாட்டம் நொடியில் கொடூர சம்பவமாக மாறியது.
https://twitter.com/Zabayar/status/2115643968532656587?a=FksRKZ1A_op8qWwD8Rc&s=20
கேக்கில் முகத்தை அழுத்தும் ஆபத்தான கலாச்சாரத்திற்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கேக்கிற்குள் ஊசிகளை மறைத்து வைத்து இத்தகைய வஞ்சகமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
