மனசாட்சியே இல்லையா…? தாயை தேடி ஏக்கத்துடன் நின்ற நாய்க்குட்டிகள்… கொடூரமாக சுவரில் வீசிக் கொன்ற பெண்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே உள்ள கம்பரசம் பேட்டையில், பிறந்த சில நாட்களே ஆன நாய்க்குட்டிகளைப் பெண் ஒருவர் சுவரில் வீசிக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் புவனேஸ்வரி என்பவர் நாய்களுக்கு உணவளித்து வருவதை, எதிர் வீட்டில் வசிக்கும் மீனாட்சி மிஸ்ரா என்பவர் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் உலாவரும் மாடுகள் மற்றும் நாய்களை அடிக்கடி கம்பால் அடித்து விரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மீனாட்சி மிஸ்ரா, அன்றைய தினம் அங்கே குரைத்துக் கொண்டிருந்த பச்சிளம் நாய்க்குட்டிகளைப் பிடித்துச் சுவரில் வீசிக் கொன்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. காட்சிகள் பதிவான ஆதாரங்களுடன் புவனேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில், ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ராவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாயில்லா ஜீவன்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற கொடூரச் செயல், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விலங்குகள் மீதான வன்முறையைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்ல.. மனைவியையும், மகளையும் யூஸ் பண்ணிக்கோங்க… வீட்டு ஓனரிடம் கணவர் சொன்ன அதிர்ச்சி…!!

குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…

5 minutes ago

இனிமே வெயிட் பண்ண தேவையில்லை! பிஎஃப் பணத்தை எடுக்க சூப்பர் அப்டேட்.. புதிய ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ ரூல்ஸ்…!!

மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…

9 minutes ago

மனைவிக்கு உயர் சிகிச்சை.. நடிகர் முத்துக்காளையின் கோரிக்கை…. முதல்வர் விஜய் உடனடி நடவடிக்கை..!!

நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றுமாறு அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அறிந்த தமிழக முதல்வர் ஜோசப்…

13 minutes ago

சிஎம் சார், என் மனைவியைக் காப்பாத்துங்க..! கதறிய நடிகர் முத்துக்காளை.. அடுத்த நிமிடமே களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…

20 minutes ago

தமிழக பட்ஜெட்: தகுதியுள்ள மகளிருக்கு ரூ.2,500 நிதியுதவி திட்டம் உறுதியானது..!!

தமிழக பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் அல்லது நவம்பர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்…

36 minutes ago

தூக்கக் கலக்கத்தால் வந்த வினை..! அதிவேக கார் விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. ஓட்டுநர்களே எச்சரிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் இரண்டு பெண்கள்…

37 minutes ago