சிஎம் சார், என் மனைவியைக் காப்பாத்துங்க..! கதறிய நடிகர் முத்துக்காளை.. அடுத்த நிமிடமே களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய்…!!

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தனது மனைவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவச் செலவுகள் மற்றும் சிகிச்சை தொடர்பான சிக்கல்களால் தங்கள் குடும்பம் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், உயிருக்கு போராடும் தனது மனைவியை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் இதற்கு உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்தார். முத்துக்காளையின் மனைவிக்கு தேவையான மேல் சிகிச்சைகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக முத்துக்காளையிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, அவரது சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று நடிகர் முத்துக்காளையைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது மனைவியின் உடல்நிலை குறித்த விவரங்களைக் கேட்டறிந்த அமைச்சர், அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இக்கட்டான சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய் எடுத்த இந்த விரைவான மற்றும் மனிதநேயமிக்க நடவடிக்கை பொதுமக்களிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Swetha

Recent Posts

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

15 minutes ago

நிஜமான அதிசயம்..! ஐந்து நாட்களில் 4 குழந்தைகளை இயற்கையான முறையில் பெற்றெடுத்த பெண்.. மருத்துவ உலகையே வியக்க வைத்த உ.பி தாயின் அதிசயப் பிரசவம்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…

28 minutes ago

BREAKING: டாஸ்மாக் கடைகள்… முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

34 minutes ago

வாரண்ட் இல்லாமல் டிஎஸ்பி கேட்ச் பிடிக்க மாட்டார்..! முகமது சிராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…

37 minutes ago

வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்ல.. மனைவியையும், மகளையும் யூஸ் பண்ணிக்கோங்க… வீட்டு ஓனரிடம் கணவர் சொன்ன அதிர்ச்சி…!!

குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…

45 minutes ago

இனிமே வெயிட் பண்ண தேவையில்லை! பிஎஃப் பணத்தை எடுக்க சூப்பர் அப்டேட்.. புதிய ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ ரூல்ஸ்…!!

மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…

49 minutes ago