இப்படியா ஆகணும்…? பச்சை சிக்னல் விழுந்ததும் நகர்ந்த பேருந்து… சக்கரத்தில் சிக்கி பலியான பெண்… பதைப்பதைக்கும் வீடியோ..!!

By Devi Ramu on ஆவணி 8, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் மும்பை முலுண்ட் செக் நாகா சந்திப்பில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில், சாலையைக் கடக்க முயன்ற ஜெயஸ்ரீ பானஜி பர்மர் (56) என்ற பெண்மணி ‘பெஸ்ட்’ அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். நெரூலில் இருந்து முலுண்ட் நோக்கி வந்த பேருந்து சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, சிக்னல் பச்சையாக மாறியதும் ஓட்டுநர் பேருந்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற அப்பெண் மீது பேருந்தின் வலது முன்பகுதி மோதியதில் அவர் கீழே விழுந்து, வலதுபுறச் சக்கரம் தலையில் ஏறி பலத்த காயமடைந்தார்.

சம்பவம் நடந்த உடனே கடக்டர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண் உடனடியாக அகர்வால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் ரவி பகவந்த் போய்சே மற்றும் நடத்துனர் சைலேஷ் சுதாகர் வாக் ஆகிய இருவரையும் பேருந்துடன் முலுண்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.