பெங்களூரில் உள்ள அஜ்ஜாம்புரா தாலுகா சிவனி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (40) என்பவருக்கு அஸ்வினி(35) என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ரமேஷ், மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை மல்லேஷ், தாய் தேவிரம்மா(75) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தாய் உடல் குறைவால் உயிரிழந்தார். மறுநாள் வீட்டிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயிருந்தது. இந்நிலையில் தன்னுடைய தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகள் வீணா போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அஸ்வினியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை விசாரித்தனர். அப்போது மாமியாரை கொலை செய்ததை அஸ்வினி ஒப்புக்கொண்டார். மேலும் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது அஸ்வினிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஆஞ்சநேயா (26) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒவ்வொன்றாக திருடி தனது கள்ளக்காதலனிடம் அஸ்வினி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வினியின் நடத்தையில் மாமியாருக்கு சந்தேகம் வந்ததால் கள்ளக்காதலை மறைக்க அவரை தீர்த்துகட்ட கள்ள காதலனுடன் சேர்ந்து அஸ்வினி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கணவர் மற்றும் மாமனாருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு பிறகு மாமியாருக்கு ராகி உருண்டையில் தூக்க மாத்திரை உடன் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட மாமியார் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் அஸ்வினி மாமியார் உடல்நிலை சரியில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளார்.
பிறகு கள்ளக்காதலனை வரச் சொல்லி காரில் மாமியாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு இரவு முழுவதும் மருத்துவமனைக்குச் செல்லாமல் காரிலேயே ஊரை சுற்றி வந்துள்ளார். பிறகு மாமியார் இழந்ததை உறுதி செய்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் பிறகு வீட்டுக்கு வந்து மாமியார் இறந்து விட்டதாக புலம்பி நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அஸ்வினி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…