இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ராபின் போல்ஸ்டன்(43) ஜனவரி மாதம் ஒரு குழந்தை பெற்றார். குழந்தையின் தந்தை யார் என்பதை அவர் மறைக்க முயன்றார். ஆனால் விசாரணையில், அவர் 13-17 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததாகத் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவரது வீட்டை சோதனை செய்தபோது குழந்தையின் ஆபாசப் படங்கள் கிடைத்தன.
குழந்தையின் பிறப்பு சான்றிதழில் 14 வயதுடைய டீன்-ஏஜ் சிறுவன் தந்தையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு விசாரணையில் ராபின் போல்ஸ்டன், அது வயது வந்த ஆள்தான் என வாதிட்டார். இப்போது அந்த சிறுவனுடன் தொடர்பில் இல்லை எனவும் கூறினார். அந்த சிறுவன் 2023-ஆம் ஆண்டு போல்ஸ்டனின் மகளுக்கு ஆண் நண்பராக இருந்தவர்.
அந்த சிறுவனுடன் நெருக்காம பழகி ராபின் பாலியல் பலாத்காரம் செய்தார். டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் இந்த சிறுவன்தான் குழந்தைக்கு தந்தை என உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போல்ஸ்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். குழந்தையை அரசு காப்பகத்தில் வைத்து பார்க்க வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுவன், போல்ஸ்டனின் முதல் மகள் உள்ளிட்டோரின் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
