கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அருகே உள்ள குண்டரா என்ற பகுதியில் வசித்து வரும் அகிலா என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே அகிலாவுக்கும் எர்ணாகுளம் அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த பினு என்ற நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி எர்ணாகுளம் ஆளுவாவில் உள்ள விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம் போல அந்த விடுதிக்கு இருவரும் சந்தோஷமாக சென்ற நிலையில் எத்தனை நாள் தான் இப்படி இருவரும் கள்ளக்காதலை ரசிப்பது, எனவே நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அகிலா கூறியுள்ளார்.
அதற்குப் பினு திருமணம் செய்ய மாட்டேன், இப்படி திருட்டுத்தனமாகவே வாழ்வோம் என கூறிய நிலையில் அகிலாவுக்கு கோபம் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற நிலையில் கடுமையாக கள்ளக்காதலனை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பினு, அகிலா அணிந்திருந்த துப்பட்டாவை பிடுங்கி அந்த துப்பட்டாவால் அகிலா கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கொலையை அரங்கேற்றியதும் அவர் முதலில் நண்பர்களை தொடர்பு கொண்ட போது தனது கள்ளக் காதலியை கொன்று விட்டேன், இதோ உடலை பாருங்கள் என வீடியோ காலில் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் காட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அகிலா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பினுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
