மராட்டிய மாநிலம் மும்பை அருகே நலச் சோப்ரா பகுதியில் வசித்து வரும் விஜய் சவான் (35) என்பவருக்கு கோமல் (28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எட்டு வயதில் மகன் உள்ள நிலையில் கோமலுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மனு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் வீட்டில் கணவர் இல்லாத நேரம் பார்த்து இருவரும் ஒன்றாக வெளியில் ஊர் சுற்றியுள்ளனர். தனியாக பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் விஜய் சவானுக்கு தெரிய வர ஆத்திரமடைந்த அவர் மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட போதிலும் கள்ளக்காதலில் கோமல் விடாப்பிடியாக இருந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொல்ல கோமல் திட்டம் தீட்டிய நிலையில் விஜய் வீட்டில் இருந்த போது அங்கு வந்த மனு பின்பக்கமாக நின்று அவரை சரமாரியாக தாக்கினார். மனுவுடன் சேர்ந்து அவரது மனைவி கோமல் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயம் ஏற்பட்ட விஜய் சவான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிணத்தை வெளியில் எடுத்துச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என பயந்து உடலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்துள்ளனர். இப்படியான நிலையில் விஜய் சவானை தேடி நண்பர்கள் வீட்டுக்கு வந்தபோது சந்தேகம் எழுந்ததால் போலீசில் புகார் அளித்தனர்.
அதேசமயம் விஜய்யின் சகோதரர்கள் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் டைல்ஸ் புதிதாக பதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கு துர்நாற்றம் வீசியதால் இடத்தை தோண்டினர். அங்கு விஜயுடன் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள கோமல் மற்றும் மனுவை தேடி வருகின்றனர். மலையாள படமான திரிஷ்யம் படத்தில் வருவது போல இந்த கொலை சம்பவம் நடந்துள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
