“வேகத்தடையா? இல்லை எமபாசமா?…. 5 அடி உயரத்திற்கு ஸ்கூட்டரில் பறந்த பெண்… ரத்தத்தை உறைய வைக்கும் காட்சி”…!!!

By Muthu Mani on வைகாசி 2, 2026

Spread the love

வேகத்தடை ஒரு மரணப் பொறியாக மாறி, ஒரு நொடியில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலையில் சாதாரண வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர், அங்கு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் ஏறியபோது எதிர்பாராத விதமாக 4 முதல் 5 அடி உயரத்திற்கு காற்றில் எகிறியது. இதில் நிலைதடுமாறிய பெண் பயங்கர சத்தத்துடன் சாலையில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு தூரத்தில் போய் விழுந்தது.

மக்களின் பாதுகாப்பிற்காகச் சாலையில் அமைக்கப்படும் வேகத்தடையே, ஒரு உயிரைப் பறிக்கும் கொலையாளியாக மாறியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் இந்த விபத்து காட்சி, சாலைப் பாதுகாப்பில் உள்ள அலட்சியத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது. பாதுகாப்பான பயணம் என்று நம்பிச் சென்றவருக்கு, அந்த வேகத்தடையே எமனாக மாறிய அந்த கொடூரமான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.