மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யூனியன் பேங்க் ஆப் இந்தியா (Union Bank of India), நாடு முழுவதும் காலியாக உள்ள 1,865 பயிற்சி பணியிடங்களை (Apprentices) நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: பயிற்சி பணியாளர் (Apprentices)
மொத்த காலியிடங்கள்: 1,865 இடங்கள்
தமிழகத்திற்கான இடங்கள்: தமிழ்நாட்டில் மட்டும் 95 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).
முன்னுரிமை: உள்ளூர் மொழி (தமிழ்) தெரிந்தவர்களுக்குத் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unionbankofindia.bank.in/en/common/recruitment என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: மே 19
