உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் என்பவர், டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆண்களைத் தொடர்புகொண்டு, நட்பாகப் பழகி பின்னர் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார். தனிப்பட்ட சந்திப்புகளின்போது ஆண்களுக்குத் தெரியாமல் அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர், அந்த ஆதாரங்களைக் காட்டிப் பணம் கேட்டு மிரட்டிய தோடு, பணம் தர மறுப்பவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி போன்ற போலிப் புகார்களைப் காவல்துறையில் அளித்து வழக்குகளில் சிக்க வைத்துள்ளார். வழக்கு மற்றும் அவமானத்திற்குப் பயந்து பல தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் இவரிடம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இவரின் மிரட்டலுக்குப் பணியாத வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், பல்லவி சிங் இதுபோன்று பல்வேறு நபர்களிடம் இருந்து 6 கோடி ரூபாய்க்கும் மேல் பறித்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், இவர் படுக்கையில் பணக்கட்டுகளை அடுக்கி வைத்து அதன் மீது படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படமும், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் மற்றொரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமிட்ட மோசடிச் செயலில் பல்லவி சிங்கிற்கு உதவியாக மேலும் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், இச்சம்பவம் உத்தரப் பிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…