மனைவி ஆடி மாதத்திற்காக பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், சென்னை சுதர்சனின் கவனம் பக்கத்து வீட்டுப் பெண்ணான நமீதாவின் மீது திரும்பியுள்ளது. நமீதாவைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சுதர்சன், அவரிடம் நேரில் சென்று காதலைக் கூறி ஆசை வார்த்தைகளைப் பேசியுள்ளார். இருப்பினும், நமீதா அதற்கு உடனடியாகப் பதில் கூறாமல், சுதர்சன் பேசிய அனைத்தையும் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.
பின்னர், நமீதா தனது ஆண் நண்பருடன் இணைந்து அந்த ஆடியோவைப் போட்டுக்காட்டி சுதர்சனை அடித்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இத்துடன் விடாமல், சுதர்சனிடம் பணம் பறிக்கத் திட்டமிட்ட நமீதா, வழக்கறிஞர் மோனிஷா, சிவரஞ்சனி உள்ளிட்ட தனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டார். இவர்கள் சுதர்சனை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து, 5 லட்சம் ரூபாய் தராவிட்டால் ஆடியோவை மனைவிக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர். சுதர்சன் மறுக்கவே, அவரைப் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
சித்ரவதை தாங்காமல் பணத்தைத் தருவதாகக் கூறித் தப்பி வந்த சுதர்சன், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது மனைவியிடம் ஒப்புக்கொண்டார். சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மனைவி அளித்த தைரியத்தில், இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நமீதா, மோனிஷா, சிவரஞ்சனி, கணேஷ் உட்பட 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சலனத்தால் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசி, லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளான இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…