“அட கடவுளே.. பப்பாளி பழம் பறிக்கப்போய் இப்படியா நடக்கணும்..? திருப்பூரில் நேர்ந்த அதிர்ச்சி மரணம்… கதறும் குடும்பம்…!!”

By Swetha on ஆடி 1, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி யமுனாதேவி (48). கடந்த 25-ஆம் தேதி இவர் தனது வீட்டில் பப்பாளிப் பழம் பறிப்பதற்காக ஏணியில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஏணியில் இருந்து கீழே விழுந்ததில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யமுனாதேவியை அவசர அவசரமாக மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

   

மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவினர் யமுனாதேவியைக் காப்பாற்றத் தொடர்ந்து தீவிரமாகப் போராடினர். இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காமல் யமுனாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.