திண்டுக்கல் மாவட்டம் அருகே திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் சானார் பட்டி அருகே உள்ள கோபால்பட்டியை சேர்ந்த விஎஸ் கோட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய மனைவி அமராவதி (50) பேருந்தில் பயணம் செய்தார். அப்போது கணவாய் பட்டி கருப்பு கோவில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனர் திடீரென்று பிரேக் போட்டதால் அமராவதி பேருந்திலிருந்து எதிர்பாராத விதமாக படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!
பதற வைக்கும் சிசிடிவி காட்சி!#Dindigul #Bus #Accident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/tGOUDz6Kxx
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2025
