Actor Sivakumar

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு அழுதபடி இரங்கல் தெரிவித்த மூத்த நடிகர் சிவக்குமார் மற்றும் சூர்யா – அப்போது சிவக்குமார் சொன்ன முக்கிய தகவல்!

By Elango on மார்கழி 4, 2025

Spread the love

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 86 வயது ஆன நிலையில் மூப்பு காரணமாக அவர் காலமான நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது நடிகர் சூர்யா இருவரும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நேரில் வந்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சிவக்குமார் கதறி அழுதார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவக்குமார் என மாற்றியது ஏவிஎம் சரவணன் சார்தான். அதன் காரணமாக எனது மகன் சூர்யாவுக்கு நான் முதலில் சரவணன் என்று பெயர் வைத்திருந்தேன் என்று சிவக்குமார் நெகிழ்ச்சியாக கூறினார்.