ஐயோ கடவுளே இப்படியா ஆகணும்…? டேங்கர் லாரி டயரில் சிக்கிய பெண்… உயிருக்கு போராடிய அவலம்…. பதைப்பதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2026

Spread the love

கேரள மாநிலம் காசர்கோடு எம்.ஜி. ரோட்டில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று கொடூரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அவ்வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற ஹனிஃபா (55) என்ற பெண்மணி லாரியின் கீழ் சிக்கி, கால்களில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலில் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து காசர்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.