கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவருடைய மனைவி மதுஸ்ரீ (34). இவர்களுக்கு திருமணம் ஆகிய நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளார். ஹரிஷ் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று இரவே வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். அதன் பிறகு காலையில் ஹரிஷ் இழந்து பார்த்த போது வீட்டில் மது ஸ்ரீயையும் குழந்தையையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியையும் குழந்தையையும் கிராமம் முழுவதும் தேடினார். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் தாயும் மகளும் பிணமாக மிதந்தை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் இருவருடைய உடலையும் மீட்டனர். மேலும் இருவருடைய உடல்கள் ஒரே துணியால் கட்டப்பட்டிருந்தது. குழந்தை தாயின் உடலை அனைத்து நிலையில் இருந்துள்ளது.
இதன் மூலம் மது ஸ்ரீ தனது குழந்தையை தன்னுடன் சேர்த்து துணியில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது. இது அங்கிருந்து அனைவரையும் கலங்க வைத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
