நெல்லை அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவி குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசத் தகவல்கள் பரப்பப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில், கல்லூரி முதல்வரின் சமூக வலைதளக் கணக்கின் மூலமாகவே அந்த அவதூறு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
