கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள புண்ணியம் பகுதியைச் சேர்ந்தவர் பிந்து (34). இவருக்கு முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்த கணவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, தன் மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையே, பிந்துவுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜியுடன் தகாத உறவு ஏற்பட்டது. அவருக்கும் மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இந்த விவகாரம் விஜியின் மனைவிக்குத் தெரியவந்தபோது அவர் கண்டித்தார். இதையடுத்து, விஜி, பிந்து மற்றும் அவரது இரு குழந்தைகளையும் கடையாலுமூடு அருகே ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து, இரவில் அவருடன் தங்கி வந்துள்ளார்.
ஒருநாள் விஜி வீட்டுக்கு வராததால், அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விஜி இனிமேல் பிந்துவை பிரிந்து தன் மனைவி, பிள்ளைகளுடன் சென்றுவிடுவதாகக் கூறியுள்ளார். விஜி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் விரக்தியடைந்த பிந்து, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, தென்னைக்குப் பயன்படுத்தும் விஷ மாத்திரையை உட்கொண்டு மயங்கினார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, பிந்து ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கடையாலுமூடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிந்துவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
