டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில் ED அதிகாரிகளும் தற்போது களமிறங்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
