ஜோமாட்டோவில் ஆர்டர்… 45 நிமிடம் தாமதம்… பார்சலை பிரித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை…!!

By Gayathri on ஐப்பசி 4, 2026

Spread the love

ஜோமாட்டோ செயலி மூலம் 450 ரூபாய்க்கு பீட்சா ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, முக்கால் மணி நேரம் தாமதமாக உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தாமதமாக வந்த அந்தப் பார்சலைத் திறந்து பார்த்தபோது, பீட்சா ஏற்கனவே யாரோ பாதியளவு சாப்பிட்டது போலவும், முற்றிலும் கெட்டுப்போன நிலையிலும் இருந்ததைக் கண்டு அந்தப் பெண் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இந்த மோசமான அனுபவம் குறித்துப் புகைப்படங்களுடன் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகத் தரம் குறித்துக் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். உணவகத்தில் பேக் செய்யப்படும்போதே இப்படி நடந்ததா அல்லது வழியில் விநியோகத்தின்போது யாராவது சாப்பிட்டார்களா எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த மாபெரும் தவறு மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்தார். இணையத்தில் வைரலான அவரது புகாரைக் கவனித்த ஜோமாட்டோ நிறுவனம், உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது.

   

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியவுடன், நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த இதே போன்ற மோசமான உணவு விநியோக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். பார்சல்களை முறையாக ‘சீல்’ செய்யாதது, சேதமடைந்த உணவுக்கு உரிய முழுமையான இழப்பீடு வழங்காதது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். உணவு விநியோக நிறுவனங்கள் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் இன்னும் அதிக பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.