“எனக்கு தோஷம் இருக்கு…” புது துணிகள் வாங்கி கொடுப்பதாக கூறி தாய்-குழந்தையை அழைத்து சென்ற பெண்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 31, 2025

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. இருளர் இன பெண்ணான ஈஸ்வரிக்கு நாகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்வரி தனது கணவருடன் சண்டை போட்டு ராயக்கோட்டை மேம்பாலம் அடிவாரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். அந்த கூடாரத்தில் ஈஸ்வரியின் தந்தை கோபி மற்றும் குடும்பத்தினரும் இருந்தனர்.

நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அப்பகுதியை நோட்டமிட்டு ஈஸ்வரியிடம் வந்து பேசினார். அவர் தனது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் ஏழை பெண்களுக்கு துணிகள் வாங்கி கொடுக்குமாறு ஜோதிடர் கூறினார். அதனால் நீங்கள் வாருங்கள் உங்களுக்கு துணிகள் வாங்கிக் கொடுக்கிறேன் என கூறி ஈஸ்வரியையும், குழந்தையையும் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள துணி கடைக்கு ஆட்டோவில் அழைத்து சென்று புது துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

   

பின்னர் அந்த பெண் ஈஸ்வரியையும் அவரது குழந்தையையும் அதே இடத்தில் விட்டு விட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் வந்தார். அப்போது ஈஸ்வரியிடம் உங்கள் குழந்தை அழகாக இருக்கிறது. நான் செல்ஃபி  எடுத்துக் கொள்ளட்டுமா எனக் கூறி குழந்தையை ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கலைஞர் சிலை பகுதிக்கு தூக்கி சென்றார்.

   

பின்னர் அருகே இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்ற வருவதாக கூறிய அந்த பெண் ஈஸ்வரி அசந்த நேரத்தில் குழந்தையுடன் மாயமானார். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் ஈஸ்வரி அழுது புலம்பி கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் தனது குழந்தையை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்துள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.