குழந்தைகள் கண் முன்னே தாயை சரமாரியாக வெட்டி சாய்த்த மர்மகும்பல்.. அதிர வைக்கும் பின்னணி..!

By Nanthini on ஆடி 19, 2025

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் விஜயகோபால் (38) என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் வசித்து வருகின்றார். தற்போது இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது அத்தை பார்வதியின் மகளான சென்னையை சேர்ந்த ஜெர்மின் (36) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 10 வயதில் மகனும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் கன்னிராஜபுரத்தை அடுத்த வேட்டு காடு பகுதியில் விஜய கோபால் தன் மனைவி ஜெர்மின் பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டி உள்ளார்.

அந்த வீட்டில் மனைவியும் குழந்தைகளும் வசித்து வந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலாடி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தன. மகன் மகளுக்காக விஜய கோபால் மாதம் தோறும் பராமரிப்பு தொகை வழங்கி வந்ததாகவும் கடந்த ஆறு மாதமாக அந்த பணம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தன்னுடைய பிள்ளைகளுடன் ஜெர்மின் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி புகுந்த ஒரு கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைகள் கண்ணெதிரே ஜெர்மினை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

   

பலத்த காயத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் கண்முன்னே தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து யாருடைய ஏவலின் பெயரில் ஜெர்மின் கொல்லப்பட்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.