கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் வனிதா (29). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜகத் குரு (32) என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனிதா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து இரண்டு மகன்கள் உடன் பழஞ்சநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்துள்ளார்.
அப்போது வனிதாவுக்கும் நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கொத்தனாரான பிரபாகரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் ஜெயத் குரு தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு வனிதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் வனிதா பிரபாகரனுடன் வசித்து வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வனிதா தனது காதலன் பிரபாகரனுடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஜகத்குரு தன் மனைவி யாருடன் வாழ பிடிக்கிறதோ அவருடனே மகிழ்ச்சியாக வாழட்டும் என்று வாழ்த்தி விட்டு அவரை பிரபாகரனுடன் அனுப்பி வைத்தார். பிறகு தன் இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு ஜகத்குரு கண்ணீர் மல்க சொந்த ஊருக்கு புறப்பட்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்தது.
