விஜயநகரம் மாவட்டம் பூசபாட்டிரேகா மண்டலம் நடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீலா ராமா என்பவர், தம்மை விட 8 வயது இளையவரான லங்காபள்ளி பங்காரிபாபா என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக பங்காரிபாபா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ராமா அவருடனான தொடர்பைக் குறைத்துக் கொண்டு ஒதுங்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பங்காரிபாபா, நேற்று ராமாவைச் சமாதானப்படுத்தித் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு பங்காரிபாபா உடலுறவுக்கு முயன்றபோது, ராமா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ராமாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகமடைந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பங்காரிபாபா ராமாவின் மார்பின் மீது அமர்ந்து அவரது தொண்டையை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், உடலை ஒரு சாக்கில் சுற்றித் தனது பல்சர் பைக் மூலம் எடுத்துச் சென்றுள்ளார்.
https://twitter.com/pulsenewsbreak/status/2099834868968370179/video/1
உடலைக் கொண்டு செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பங்காரிபாபா வண்டியை நிறுத்தியபோது, சாக்கிலிருந்து ராமாவின் கை வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை அங்கிருந்த ஊழியர் பார்த்து அனைவரையும் எச்சரித்தார். இதனால் பதறிய பங்காரிபாபா அங்கிருந்து தப்பிச் சென்று நெல்லிமர்லா மண்டலம் குடுபி அருகே உடலை வீசிவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், பங்காரிபாபாவை விரைந்து கைது செய்தனர்.
