மாமன் மகனுடன் கள்ளக்காதல்… நேரில் பார்த்த தாய்… 8 மாதங்களுக்குப் பிறகு… செப்டிக் டேங்கில் மிதந்த எலும்புக்கூடு… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

Spread the love

தமிழகத்தில் தற்போது நடைபெறக்கூடிய கொடூர கொலைகள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிதான் தென்காசி மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவர் கோவையில் வேலை பார்த்து வந்த தன்னுடைய கணவரை விட்டு எதிர் வீட்டில் வசித்த மாமன் மகன் மாடசாமி உடன் உறவு வைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்ததை மாடசாமியின் தாய் கண்டித்தும் பேச்சியம்மாள் கணவர் அதனை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டார். மாடசாமி பேச்சியம்மாளை தன்னுடைய குடும்பத்தை விட்டு தன்னுடன் வரும்படி வலியுறுத்தினார்.

ஆனால் பேச்சியம்மாள் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு பேச்சியம்மாள் வீட்டில் இருவரும் தனியாக இருந்த சமயத்தில் மாடசாமியை நாற்காலியில் கட்டி தலையணையால் அமுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்தை மறைப்பதற்காக பேச்சியம்மாள் தன்னுடைய தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரனின் உதவியுடன் மாடசாமியின் உடலை வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் தள்ளி உள்ளார்.

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு வீட்டு உரிமையாளர் பழுது பார்க்க வந்த சமயத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது பேச்சியம்மாள் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

5 minutes ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

14 minutes ago

BIGBREAKING: ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…

18 minutes ago

“யார் இந்த கீர்த்தனா..?” சரளமான ஹிந்தி பேச்சால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தமிழக வெற்றிக் கழக புயல்.. வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…

21 minutes ago

“சாவு கண்ணு முன்னாடி வந்துச்சு!” வாணவேடிக்கையால் வந்த வினை.. சுடுகாடாக மாறிய திருமண மேடை… வைரலாகும் பகீர் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் 'வர்மாலா'…

22 minutes ago

“ஸ்டாலின் தடுத்தால் நிற்க மாட்டோம்” விஜய்க்காக வரிந்துகட்டும் பெ.சண்முகம்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI மற்றும் CPM அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள்…

26 minutes ago