அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சொந்தக் குழந்தைகளையே கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹில்ஸ்பரோ பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி நடராஜன் (36) என்ற அந்தப் பெண், தனது 7 மற்றும் 5 வயதுடைய மகன்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய குழந்தைகளின் தந்தை, சிறுவர்கள் இருவரும் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து சோதித்தபோது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், பிரியதர்ஷினி தனது குழந்தைகளுக்கு ஏதோ செய்துவிட்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரியதர்ஷினி மீது கொலைக் குற்றம் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் மரணத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு தாயே தன் குழந்தைகளைக் கொலை செய்த இந்த கொடூரச் சம்பவம் அங்குள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…