துணிக்கடையில் வேலை பார்த்த பெண்…! ஒரே காலில் ரூ.25 லட்சம் சம்பாதித்தது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2025

Spread the love

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் தொழிலதிபருமான சுதா கார்த்திக் (44) என்பவர், ஆன்லைன் முதலீட்டு மோசடி குறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வாட்ஸ்அப் மூலம் இவரைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர், ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பேசியுள்ளார். அதை நம்பி சுதா கார்த்திக் ₹25 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

இப்புகாரின் பேரில், கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த ஆன்லைன் மோசடியில் முக்கியக் குற்றவாளியான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தீபா (26) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

   

பெங்களூருவில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரியும் தீபா, மோசடி கும்பலுக்குத் துணையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்துச் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.