“எனக்கு அவன் கூட இருக்க தான் பிடிச்சிருக்கு”…. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… மர்ம உறுப்பில் தாக்கி தூக்கில் தொங்கவிட்ட மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

கர்நாடக மாநில மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இந்திரா நகர் கிராமத்தை சேர்ந்த வீரண்ணா(44) என்பவருக்கு திருமணம் ஆகி சிவம்மா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகும் நிலையில் 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனுடைய கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு எச்டி கோட்டை தாலுகாவை சேர்ந்த பலராம் என்ற நபருடன் சிவம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பிறகு கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இது பற்றி ஒரு கட்டத்தில் கணவருக்கு தெரிய வந்ததால் தம்பதி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. பிறகு இது தொடர்பாக வீரண்ணா கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் கூறியுள்ளார்.

அவர்கள் சிவம்மாவையும் பலராமையும் கண்டித்து அனுப்பியுள்ளனர். இருந்தாலும் இருவரும் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பலராமிடம் சிவம்மா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த வீரண்ணா மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனைவி கணவனை அவருடைய மர்ம உறுப்பில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு மனைவி தனது சேலையில் கணவரை தூக்கில் தொங்கவிட்டு ஊர் மக்களிடம் தனது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.

   

உடனே இதைப் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் சிவம்மாவுக்கும் பலராமுக்கும் இருந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மனைவிதான் கணவனை கொலை செய்தது தெரியவந்தது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள பலராமை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.