“இனிமே நீ உயிரோட இருக்க கூடாது”…. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… தூங்கிய கணவரை கயிற்றால் இறுக்கிக் கொன்ற மனைவி…!

By Nanthini on தை 22, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தைச் சேர்ந்த சுதீர் ரெட்டி என்பவர், ஹைதராபாத்தில் தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் அவரது மனைவி ஞான பிரசன்னாவிற்கும் இடையே ஒருவரையொருவர் சந்தேகிக்கும் பழக்கத்தால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுதீர் ரெட்டி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஞான பிரசன்னா, கணவர் உறங்கிய பிறகு கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பிறகு கணவரின் உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறி ஞான பிரசன்னா நாடகமாடியுள்ளார். இருப்பினும், சுதீர் ரெட்டியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுதீர் ரெட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுதீர் ரெட்டி கீழே விழுந்து சாகவில்லை என்றும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதும் உறுதியானது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸார் ஞான பிரசன்னாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறு ஒரு கொலையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.