கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக ஐந்து வயது சிறுமிக்கு பிறப்புறுப்பில் அவருடைய சித்தி சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் வகுப்பறையில் அந்த சிறுமி உட்கார சிரமப்படுவதை அவருடைய அங்கன்வாடி ஆசிரியை கவனித்த பிறகு இது வெளிச்சத்திற்கு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த அங்கன்வாடி ஆசிரியை காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பீகாரை சேர்ந்த அந்த சித்தியை காவல்துறையினர் கைது செய்தனர். முகமது இண்டியாஸ் என்பவரின் ஐந்து வயது மகளை பராமரித்து வந்த அவருடைய இரண்டாவது மனைவி நூர்நாசர்(35) கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
