“நீ எல்லாம் ஒரு பெத்த தாயா”… கள்ளக்காதலனுடன் உல்லாசம், ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணம்… பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பெற்ற மகனையே துடிதுடிக்க கொலை செய்த தாய்…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் வசித்து வரும் மம்தாசிங் என்ற பெண் தன்னுடைய கள்ளக்காதலன் மயங்க் கட்டியார் மற்றும் அவருடைய சகோதரர் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து தன்னுடைய 25 வயது மகன் பிரதீப் சிங்கை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா தன்னுடைய கணவர் இறந்த பிறகு கட்டியாருடன் நெருக்கமாக பழகி வந்ததை அறிந்த மகன் பிரதீப் எதிர்த்துள்ளார்.

இந்த கள்ளக்காதல் உறவை தொடரவும் பிரதீப் பெயரில் எடுக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான ஆயுள் காப்பீட்டு பணத்தை பெறுவதற்கும் மம்தா இந்த கொடூர கொடை திட்டத்தை தீட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து மகனை இரவு உணவுக்காக அழைத்த மம்தா, அவர் திரும்பும் வழியில் கள்ளக்காதலனையும் ரிசியையும் வரவழைத்து சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு சடலத்தை நெடுஞ்சாலை அருகே வீசி விபத்து போல சித்தரித்து நாடகமாடியுள்ளனர்.

   

இதனைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மொபைல் தரவுகள் மூலமாக சதி அம்பலமானதை தொடர்ந்து மம்தா மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் வலை வீசி தேடிய நிலையில் கள்ளக்காதலன் மட்டும் சிக்கி உள்ளார். ரிஷி காலில் குண்டடிப்பட்டு பிடிபட்டார். முக்கிய குற்றவாளியான மம்தா தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.