உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அருண் (26) என்ற வாலிபருக்கு instagram மூலமாக ராணி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். பிறகு ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்துக் கொண்ட நிலையில் 52 வயதான ராணியை தன்னுடைய வயதை மறைத்து பில்டர் செயலி மூலமாக புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றியுள்ளார். காதல் மோகத்தில் இருந்த அருணால் ராணியின் வயதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக சில மாதங்களுக்கு முன்பு ராணியை அருண் நேரில் சந்தித்தபோது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசமாக இருந்த சமயத்தில் ராணியின் நடவடிக்கையில் அருணுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவளுக்கு 52 வயது என்றும் நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆடிப் போன அருண் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்துள்ளார்.
கோபத்தை வெளிக்காட்டாமல் ராணியை ஏமாற்றி அவரிடமிருந்து 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை அருண் தூக்கி வீசி உள்ளார். ராணியின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்போது அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…