திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற உள்ளது. இதில் ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாட்கள், அதாவது 30, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்கல் முறையில் பக்தர்கள் தரிசன டோக்கன்களை பெற்றனர்.
ஜனவரி 2-ம் தேதி முதல் எவ்வித டோக்கன்கள் இல்லாவிட்டாலும், சாமானிய பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்கள் மூலம் இம்முறை மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தானம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த செய்தி ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
