இரவில் வந்த ரகசிய தகவல்… சுற்றி வளைத்த பயங்கரவாதிகள்… துப்பாக்கி சண்டையில் உயிர்த்தியாகம் செய்த காவலர்…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை வேரறுக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு படையினரும் காவல்துறையும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே காஷ்மீர் உதம்பூர் மாவட்டம் சோஹன் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு காஷ்மீர் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் அந்தப் பகுதியில் சுற்றி வளைத்து விரிவான சோதனையை நடத்தினர்.

அந்த சோதனையில் வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது அம்ஜத் பதான் என்ற காவல்துறை வீரர் வீர மரணம் அடைந்தார். அவருடைய உயிர் தியாகம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி மோதல் நீடித்து வருகின்றது. அந்தப் பகுதி முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளது.