த்ரிஷா தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகை ஆவார். இவரது இயற்பெயர் அனுராதிகா என்பதாகும். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்து வந்தார் த்ரிஷா. அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக துணை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லேசா லேசா, ஆயுத எழுத்து, கில்லி, ஜி, கிரீடம், உனக்கும் எனக்கும், பீமா, சர்வம், மங்காத்தா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனார் த்ரிஷா.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் த்ரிஷா. அன்றிலிருந்து இன்று வரை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார் த்ரிஷா. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. 2025 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் திரிஷா வீட்டில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அது என்னவென்றால் த்ரிஷா ஆசையுடன் வளர்த்து வந்த நாய் உயிரிழந்திருக்கிறது. அதை சமூக வலைத்தள பதிவின் மூலம் தனது துக்கத்தை பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா. “அவன் இல்லாமல் என் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை” என்று உருக்கமாக தனது பதிவில் எழுதியிருக்கிறார் த்ரிஷா. இதனால் த்ரிஷாவின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறது.