திடீர் திருப்பம்… பதவி ராஜினாமா, பாமகவிலிருந்து விலகும் ஜி.கே மணி… பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜிகே மணி, பாமக தமிழகத்தில் வலுவான கட்சியாக உள்ளது. 1980 ஆம் ஆண்டு ராமதாஸ் இந்த கட்சியை தொடங்கினார். இந்த இயக்கத்தை சாதாரணமாக அவர் கட்டி எழுப்பவில்லை. இரவு பகல் பாராமல் கிராமங்கள், மலைகள் மற்றும் காடுகளில் நடந்தே பயணித்து மக்களை சந்தித்துள்ளார். இதனால்தான் இன்றைய அரசியல் சூழலில் தவிர்க்க முடியாத கட்சியாக பாமக உள்ளது. 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். என்னையும் அப்பாவையும் பிரித்தது ஜி கே மணிதான் என்று அன்புமணி கூறுகின்றார்.

ஆனால் நான் எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கின்றார். அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டுமென ராமதாஸிடம் நான் தான் சொன்னேன். கூட்டணி பற்றி ஆரம்பகட்டத்தில் பிற கட்சிகளுடன் நான்தான் பேசுவேன். அன்புமணியை வீட்டை விட்டு வெளியே வர சொல்லுங்கள் என்று ராமதாஸ் இடம் நிர்வாகிகள் கூறினர். பாமகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அன்புமணி மட்டும் தான் காரணம். கட்சியில் பிரச்சனை இருக்கும் போது விருப்ப மனு வாங்குவது மோசடி வேலை.

   

பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தான். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். அன்புமணி மற்றும் ராமதாஸ் ஒன்றுசேர தயார் என்றால் நான் பாமகவிலிருந்து விலக தயார். அன்புமணி யார் யார் துரோகிகள் என நினைக்கிறாரோ அவர்கள் அனைவரும் பாமகவில் இருந்து விலக தயாராக இருக்கின்றோம். ராமதாசு உடன் அன்புமணி இணைந்து செயல்பட வேண்டும். நானும் என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியை கூட நான் ராஜினாமா செய்கிறேன். வேறு கட்சியிலும் சேர மாட்டோம். மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் வந்து சேர்கின்றோம் என்று ஜிகே மணி அதிரடியாக பேசியுள்ளார்.