தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை தான் தற்போது நீடிக்கிறது. தந்தை மகனின் சண்டை டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை மேடையிலேயே வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேற தன்னுடைய மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் ராமதாஸ் அமர்த்தினார். இது அன்புமணிக்கு ராமதாஸ் உடனான மோதலை மேலும் அதிகப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனையும் வரும். இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் அவர் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாமகவின் கூட்டணி நிலைபாடு குறித்து டிசம்பர் 29ஆம் தேதி சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிக்க உள்ளதாக ஜிகே மணி தெரிவித்துள்ளார். அன்புமணியின் பேச்சுகளால் பலமுறை ராமதாஸ் கண்கலங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…