“செங்கல்லை தங்கமாக மாற்றுவேன்” தாய், மகளுக்கு நேர்ந்த கொடுமை… மாந்திரீகவாதி செய்த தில்லாலங்கடி வேலை..!!

By Soundarya on ஆனி 7, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரில் மந்திரவாதி ஒருவரால் பெண்ணும் அவருடைய மகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது களிமண் செங்கற்களை தங்கமாக மாற்றிக் கொடுப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றிய குல்ஷன் லோதி என்ற மாந்திரீகவாதி ஒரு வீட்டிற்கு ஏழு நாட்களாக தொடர்ந்து சென்றுள்ளார். பிறகு சூனியம் செய்கிறேன் என்று கூறி பூஜை செய்வது போல நடித்துள்ளார். பிறகு அந்த வீட்டில் உள்ள பெண்ணிடம் உடலுறவுக்கு சம்மதம் அளித்தால் தான் செங்கற்கள் தங்கமாக மாறும் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.

இதனையடுத்து கடந்த மே 30ஆம் தேதி அன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அந்த மந்திரவாதி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரிடமிருந்து பூஜைக்காக முப்பதாயிரம் ரூபாய் பணத்தையும்  வாங்கியுள்ளார். பின்னர் கடந்த 3 ஆம் தேதியன்று அந்த பெண்ணின் மகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மாந்திரீகவாதியை கைது செய்துள்ளார்கள்.