நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியின் புகைப்படம் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌதமி. இவர் 1983ல் ‘வசந்தமே வருக’ படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 1987 ல் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘குரு சிஷ்யன்’ திரைப்படம்.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்தார். இப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஊரு நாயகன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்தார். அதே போல இவருக்கு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன.
இவர் சந்திப் பார்த்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். ஆனால் திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் சந்திப் பார்த்தியாவிடமிருந்து விவாகரத்து பெற்று பிறந்தார். மகள் சுப்புலட்சுமியுடன் தனியாகவே வாழ்ந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
ஒரு சில காரணங்களுக்காகவும் மகளின் வருங்காலம் கருதியும் கமலஹாசனை விட்டு விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கௌதமி அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது கார்த்திகை தீபம் ஸ்பெஷல் ஆக நடிகை கௌதமி தனது மகள் சுப்புலட்சுமியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘தமிழ் சினிமாவுக்கு வருங்கால ஹீரோயின் ரெடி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…